பிரபஞ்சம் !
ஈர்ப்பு விதியானது நமது எண்ணங்களின் வலிமையாலேயே வேலை செய்கிறது. நாம் அனைவரும் உணர்ந்த ஓன்று நமக்கு மேலே எதோ ஒரு சக்தி உள்ளது, அது தான் அகில உலகத்தையும் ஆட்டிப்படைக்கின்றது . அதன்பெயர் மதத்திற்கு மதம் மாறுபடுகிறது. ஆனால் நம் ஈர்ப்பு விதியில் அதன்பெயர் பிரபஞ்சம்.
இயற்கை எதை எல்லாம் உணர்ந்ததோ; அதுவே இன்றைய பிரபஞ்சம். இந்த உலகம், மற்றும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், கோள்கள் எல்லாம் சேர்ந்ததுதான் இந்த பிரபஞ்சம் ஆகும்.கற்பனைக்கெட்டாத விஸ்தாரணம் இந்த பிரபஞ்சம். எளிதாக புரிந்து கொள்ளுவதற்காக ஆகாயத்தை நாம் பிரபஞ்சம் என்று கொள்ளலாம்.
எல்லா நட்சத்திரங்களையும், கோள்களையும் தாங்கி இருப்பது வானம் தானே. அந்த ஆகாயம் எவ்வளவு சக்திமிக்கதாய் இருந்தால் அத்தனை எடையுள்ள நட்சத்திரங்களையும், கோள்களையும் தாங்கி நிற்கும்? அதுதான் பிரபஞ்சசக்தி (Cosmic Energy) எனலாம். கடவுள்என்றும் கூறலாமே !
அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில்…நம் உடல் பஞ்ச பூதங்களால் கட்டமைக்கப்பட்டது. எனவே நாமும் இயற்கைதான். நாம் எதை உணர்கிறோமோ அது மனதால் வடிவமைக்கப்படுகிறது.
கவனம் குவியும் இடத்தில் சக்தி பாயும், எதை பாவிக்கிறாயோ அது அப்படியே ஆகும்.
. ஒவ்வொரு வினைக்கும் அதற்கு ஈடான ஒரு எதிர்வினை உண்டு என்னும் நியூட்டனின் விதிபோல், நாம் நினைக்கும் ஒவ்வொரு நினைப்பிற்கும் ஒரு விளைவு உள்ளது.
அந்த பிரபஞ்சத்தை நம்புவதன் மூலம் நம் வாழ்க்கைக்கு தேவையான வசதிகளை உருவாக்கிக்கொள்ளலாம்.
பிரபஞ்ச சக்தி மகத்துவமானது. அபரிதமானது. மேலும் நாம் அதை இலவசமாக பெறலாம். ஆனால் எத்தனை பேர் அந்த பிரபஞ்ச சக்தியை பயன்படுத்துகிறோம்? மிக மிகக் குறைவான மக்களேபிரபஞ்ச சக்தியின் பெருமைகளை அறிந்திருக்கின்றனர். வெகுசிலரே பிரபஞ்ச சக்தியைப் பெற்று பயன் பெறுகின்றனர். பிரபஞ்ச சக்தியை பெறுவது எப்படி?
நாம் எந்த நிலையில் இன்று இருக்கிறோமோ, அதற்குக் காரணம் நமது எண்ண அலைகள்தான். நாம் எதைக்குறித்து எப்பொழுதும் சிந்திக்கிறோமோ, அதுவே நம்மை வந்தடைகிறது. ஏனெனில், நம் மனதின் எண்ண அலைகள் வலிமையானவை. அவை இந்தப்பிரபஞ்சத்தில் உள்ள அதே தன்மையை உடைய அலைகளை ஈர்க்க வல்லவை.
பிரபஞ்சத்தையும் நம்மையும் இணைக்கும் பாலம்தான் ஆழ்மனது. ஆழ்மனதில் நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம் ! இதுதான் ஈர்ப்புவிதியின் மூலக்கருத்து.
தொலைக்காட்சி நிலையத்தில் ஒளிபரப்பாகும் காட்சி எப்படி தொலைக்காட்சி பெட்டிக்கு செல்கின்றதோ, அது போல நம் ஆழ்மனதில் பதியவைக்கப்பட்ட விஷயங்கள் பிரபஞ்சத்திற்கு சென்று அது அங்கிருந்து பிரதிபலிக்கப்பட்டு நாம் சிந்தித்த விஷயத்தை சென்றடைந்து அதை செயலாக்குகிறது .
சென்ற பதிவில் நீங்கள் நேசிப்பவரிடம் சொல்ல நினைத்த விஷயத்தை உங்கள் மனது தொடர்ந்து நினைத்து கொண்டே வந்திருக்கும் அந்த விஷயம் ஆழ்மனதிற்கு சென்று அங்கிருந்து பிரபஞ்சத்தின் மூலம் உங்களை நேசிப்பவரிடம் சென்றடைந்து உங்கள் இருவரின் எண்ண அலைகளையும் ஒரே மாதிரியாக செயல் படவைத்தது..
சரி இது உண்மையென்றால், நம் வாழ்க்கையில் நினைத்தது எல்லாம் 100க்கு 100 நடப்பது இல்லையே ஏன் ?
ஆம் ...! இந்த இடத்தில் நம் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது நம் எண்ணங்களின் வலிமைதான்.
நீங்கள் வெற்றிபெற்ற சிலரின் பேட்டியை கேட்க நேர்ந்திருக்கலாம், பெரும்பாலும் அவர்கள் சிறுவயது முதலே வெற்றி பெரும் எண்ணத்தை வளர்த்திருப்பார்கள். இதே போல்தான் தற்கொலை செய்துகொண்ட பலரும் அதுகுறித்த வார்த்தைகளை அடிக்கடி சொல்லியிருப்பார்கள்.
இதன் மூலம் வலிமையான எண்ணங்கள் தான் நாம் நினைத்ததை நடக்க செய்கிறது என்பதை அறிகிறோம்.
சரி வலிமையான எண்ணங்களை எப்படி உருவாக்குவது… ?
அது குறித்து அடுத்த பதிவில்...

Nice information
ReplyDeletecoach hire europe