விநாயகர் நம் வாழ்க்கையுடன் பல வகைகளில் ஒன்றிவிட்டவர். விநாயகரை வழிபட்ட பிறகே பூஜை, ஹோமங்கள் மற்றும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளைத் தொடங்குவோம். விநாயகர் பூஜைதான் பிரதானபூஜை. அவ்வளவு ஏன்? நாம் எப்போதும் எழுதத் தொடங்குவதற்கு முன்பு, 'உ' என்று பிள்ளையார்சுழி போட்ட பிறகே மற்றவற்றை எழுதுவோம்.
தனக்கு மேல் தலைவன் இல்லாதவர் ஆதலால் பிள்ளையாருக்கு விநாயகன் என்று பெயர். அதாவது ‘வி’ என்றால் இதற்கு மேல் ஒன்றும் இல்லை எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.
தூய்மையான பக்தியுடன் தம்மை வழிபடுபவர்களின் மனங்களில் தம்மை எளிதாக்கிக்கொண்டு எழுந்தருள்கிறார் என்னும் பேருண்மையையும் மூஞ்சூறு வாகனம் நமக்கு உணர்த்துகிறது...
விநாயகர் தன் அன்னையைப் போல் சிறந்த பெண் வேண்டும் என்று தான் ஆற்றங்கரையிலும், குளத்தங்கரையிலும் வீற்றிருக்கிறார் என்பார்கள். இவர் தன்னை வழிபடும் அடியவர்களுக்கு காரிய சித்தியும், அதற்குரிய புத்தியையும் கொடுக்கும் பண்புகளையே தன்னுடைய இரண்டு மனைவிகளாய் கொண்டவர்
, அவரைத்தொழுது நம் வெற்றி பயணத்தை தொடங்குவோம்...!

No comments:
Post a Comment
தங்கள் ஆலோசனைகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன