ஈர்ப்பு விதி…?
இது ஏதோ கைரேகை ஜோதிடம் என தவறாக நினைக்கவேண்டாம், இது உங்களின் வாழ்வை வளமாக்கும் ஓர் அற்புத ரகசியத்தை சொல்லும் பதிவு. கடவுளின் படைப்பில் நாம் அனைவரும் ஒன்றானவர்களே, பிறக்கும்போது அனைவரையுமே நிர்வாணமாக ஒன்றுமில்லாமல்தான் படைத்தார்.ஆனால் ஏழைகளாகவும் பணக்காரர்களாகவும் மனிதன் உருவானது எப்படி ? அது தான் "ரகசியம்"
அந்த ரகசியம் வேறொன்றுமில்லை " ஈர்ப்பு விதி " தான் அது
." புவி ஈர்ப்பு விதிதான் நாங்க பள்ளிக்கூடத்திலேயே படிச்சுட்டோமே, இது என்ன புதுசா ? "உங்க மைண்ட்வாய்ஸ் நல்லாவே கேக்குதுங்க..!
பொறுங்க ... அவசரப்படாதீங்க நண்பர்களே ! இது வேற,..
இதை பின்பற்றினால் நினைத்ததை நினைத்தபடி ஈர்க்கும் ! , நம் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் !
இந்த ரகசியத்தைப்பற்றி தெரிந்தவர்கள் வாழ்வில் வெற்றியை தனதாக்கி கொண்டனர். இதைப்பற்றி ஆங்கிலத்தில் The Law of Attraction என சொல்வார்கள், இதைப்பற்றி நம் வள்ளுவர் எப்போதோ கூறிவிட்டார், பிறகு எப்படி இது ரகசியம் ? அது குறித்த போதிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லையென்பதனாலேயே அது இன்னும் ரகசியமாக உள்ளது. அது என்ன...?
வெள்ளத்தனைய மலர் நீட்டம்; மாந்தர் தம்
உள்ளத்தனையது உயர்வு
எண்ணிய எண்ணியாங்கு எய்துப
எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
திண்ணியர் ஆகப் பெறின்.
ஆமாங்க அதுதான் நமது எண்ணங்கள்...!
, நமது எண்ணங்களை சரிசெய்து விட்டால் நமது வாழ்க்கை வெற்றியை நோக்கி தானாகவே செல்லும்.
எண்ணங்களுக்கு அவ்வளவு சக்தியுண்டா...!?
எப்படி...?
இதை உங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடந்த ஒரு விஷயத்தை வைத்து தெளிவாக்குகிறேன்.
நீங்கள் மிகவும் நேசிக்கும் ஒருவரை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதற்காக அழைக்க சென்று இருப்பீர்கள், அங்கு சென்றவுடன் அவர், “இப்போதுதான் உன்னை நினைத்தேன்!” என்று சொல்வதோடு , நீங்கள் என்ன சொல்ல வந்தீர்களோ அதை அவர் சொல்வார். உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். (“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்,” என்ற பாடல் ஞாபகம் வருமே...!) இது
தான் ஈர்ப்பு விதி
! இது
எப்படி நடந்தது என்பது பற்றி அடுத்த பதிவில்...
இதுவரையிலும் இந்த பதிவை பொறுமையாக படித்து ஊக்கம் கொடுக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி ! வாழ்க ! வளமுடன் !

No comments:
Post a Comment
தங்கள் ஆலோசனைகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன