Friday, 28 December 2018

யோகமும் தியானமும் பகுதி 1




""யோகத்தில் நின்று தொழில்களைச் செய்.
யோகமே செய்கைகளில் திறமையானது"

 (யோகா தியானம்,
மதம்-இனம்-மொழி-கீதை இவற்றிக்கு அப்பாற்பட்டது. இப்பதிவில் அந்தச் சர்ச்சைகள், கடந்தகால சாதக பாதக வரலாற்றுச் சண்டைகள் வேண்டாமே.)

இந்த உடலின் தலைக்குள்ளே மூளை.
மூளைக்கு மேல்பகுதி கோடு கோடுகளாய் அறிவு.
மூளைக்கு உள்ளே உள்ளே, அரூபனாய் மனம்.


வயிறு,
பசியை உணர்த்தி கேட்டு வாங்கி உண்கிறது.
தொண்டை, காய்ந்து உணர்த்தி தன் தாகத்திற்கு நீர் அருந்திக் கொள்கிறது.
காற்றை அனிச்சையாக நாசி எடுத்துக்கொள்கிறது.
இவற்றால்,
உடல் வளர்கிறது. உயிர் வாழ்கிறது. சீராக இயங்குகிறது.
ஆனால் மனமெனும் ஒருவனுக்கும் வளர்வதற்கு உணவு தேவை என்பது தெரியாமலே மக்களில் பெரும்பான்மையினர், வளர்ந்து வாழ்ந்து மடிந்து கொண்டிருக்கிறோம்.
மனமும்
தன் தேவைகளை உணர்த்தும் படி உணர்வுகளுடன் படைக்கப்படவும் இல்லை.
(ஆயிரம் ஆயிரம் நம் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும்
மூளைக்கு, தொடு உணர்வுகள் இல்லை என்பது மருத்துவ, விஞ்ஞான உண்மை என்பது தனிச்செய்தி)
ஆனாலும் மனவளர்ச்சிக்கு தினம் ஒரு வேளையாவது நாம் உணவு கொடுக்க வேண்டும்.
அந்த மனத்தின் உணவு தான் .....
தியானம்எனும் அறுசுவை உணவு.
இதை,
அரூபனுக்கு அரூப உணவு என்றும் வைத்துக் கொள்ளலாம்.
உடலின் உணவுகள், ரத்தமாய் சதையாய் எலும்பாய் வளர்கிறது. செயல்படும் சக்தியாய் வெளிப்படுகிறது என்பது அறிவோம்.

மனத்தில் என்ன வளரும்.?
கேட்கிறது ஆறாம் அறிவு.மூளைக்குள் வளர்வது,
*அறிவு *ஆரோக்கியம் *உழைப்பு *ஒழுக்கம் *ஆளுமை *அன்பு *அறநெறி *ஈகை *கருணை *ஐம்பொரி-அடக்கம் *மனோதிடம்
*மன அமைதி *பேரானந்தம்
*பிறப்பின் நோக்கம் *வாழ்தல் முறை *நிலையாமைத் தெளிவு
இவை அனைத்தும் உனக்குள் தானாக வளரும்.

யோகா தியானம் செய்யாதவர்கள் எல்லாம் ஒழுக்கம் கெட்டவராக, முட்டாளாகத்தான் வாழ்கிறார்களா?? நல்லவர்கள் உயர்ந்தவர்கள் இல்லையா??
சரியான கேள்விதான்.
இருக்கிறார்கள்.
நிறைய இருக்கிறார்கள். ""குழந்தைப்பருவம் முதல், தொடர்ந்து பழக்கப்படும் நற்பழக்க, வழக்கங்களால்
நல் ஒழுங்கனாகி
நல்ல உழைப்பாளனாகி வாழ்பவர் கோடிகோடி உண்டு.
ஆனால் மேலே குறிப்பிட்ட
16 (ஸ்டார்) குணங்களோடு முழுமையாய் வாழ்பவர் எத்தனை பேர்?? வளர்ப்பில் எத்தனை ஸ்டார் குணங்களை நாம் சொல்லித் தருகிறோம் என்று 'கவுன்ட்' பண்ணியும் 'திங்' பண்ணியும் பாருங்கள். மூன்றில் ஒரு பங்கு கூடத்தேராது. அந்த தேரா முழுமையின்மையால்  தான் மனித இனம் அழிவை நோக்கிப் பயணிக்கிறது.

அந்த அழிவின் சில நிகழ்வுகள்....
+ •கோடிகோடியில் வாழ்ந்தவன், தொழில் நட்டம் வந்துவிட்டால், உயிரை மாய்த்துக் கொள்கிறான்.
+ •ஆறு வேளை அறுபடையை வணங்குபவன், தன் நிறுவனத்தில் பணியாற்றும் பிறன் மனையை அடைய நினைக்கிறான். அதற்காக அவளின் கணவனையும் கொல்கிறான்.
+ •பணம் சம்பாரிக்க, கெட்டுப்போன நாய்கறியை ஹோட்டலில் சமைத்துப் போட்டு மனித உயிரைத் துச்சமாக நினைக்கிறான்.
+ •சொத்தை, தன் பெயரில் மாற்றச்சொல்லி அப்பனேயே அடித்துக் கொள்கிறான் மகன்.
+ •பெண்கள் விடுதி குளியல் அறையில் கேமிரா வைத்தல்,
+ •கள்ளக் காதலுக்காக பெற்ற மகளைக் கொல்லுதல்,
- - இப்படி இன்னும் ஆயிரமாயிரம் நிகழ்வுகள் சொல்லலாம்.

மேலே சொன்னவர்கள் எல்லாம் "தொழில் முறைத் திருடர்கள்" அல்ல.
சமுதாயத்தில் நம் *அண்டை வீட்டில் எதிர் வீட்டில் வாழ்பவர்களே.!
ஆனால்  இந்த யோகா மற்றும் தியானம் செய்பவர்கள் மனம் இதை செய்ய துணியாது
ஏனெனில் முதலில் சொன்ன குணங்களை உன் மனதுக்குள் தியானம் புகுத்திவிடுவதால், அறநெறிகளோடு
ஆரோக்கியத்தோடு வாழ்வாங்கு வாழ்வோம்.

இப்பிறவி வாழ்வுக்குப் பின், சொர்க்கம் நரகம் பற்றி நாம் அறியோம்.
ஆனால் இப்போது வாழும் வாழ்வு சொர்க்கம் ஆக வேண்டுமா.? யோகாசனம் ஆழ்நிலை தியானம் கற்று பின்பற்றுங்கள்.
சொர்க்கம்  என்பதை "பணம்நிறை" வாழ்வாக மட்டும் குறிப்பிடவில்லை.
பணத்துடன், "மனநிறை ஆரோக்கிய" வாழ்க்கையைக் குறிப்பிடுகிறேன்.
அதேபோல்
யோகாசனம் ஆழ்நிலை தியானம்
மூச்சுப்பயிற்சி
இவற்றை உங்கள் மகள்-மகனுக்கோ, பேத்தி-பேரனுக்கோ கொண்டு சேர்த்து விட்டீர்கள் எனில் இந்திரபுரியில் 4 'கிரௌண்ட்' இடம் வாங்கிப் போட்டுவிட்டதாக  கொள்ளுங்கள்.


முதலில் யோகாவின் மேல் உள்ள ஆன்மீக தெய்வீக மதப் பார்வையை கொஞ்சம் விட்டுவிடுவோம்.
அதன் மேல் அறிவியல், ஆரோக்கிய-இயல் பார்வையை வைப்போம்.
ஜீம் மாதிரி, வாக்கிங் மாதிரி, செட்டில் கார்க் மாதிரி,இதுவும் ஒரு உடற்பயிற்சி.
அவைகளைவிட பல மடங்கு நல்ல விளைவுகள் தரும் (உடல்+மன) பயிற்சி.
எனவே அறிவு, அறிவியல் ரீதியாக அணுகுவோமாக.
உலகப் புகழ்பெற்ற நரம்பியல் நிபுணர் டாக்டர் P. ராமமூர்த்தி உலக நாடுகளின் மருத்துவ கல்லூரிக்கு வகுப்பெடுக்கச் சென்றவர். மறைந்த மு.கருணாநிதி அவர்களின் குடும்ப நண்பர் அவர்.
1983 ஆம் ஆண்டு ஜூனியர் விகடன் வார இதழில், வாசகர் கேள்விக்கு பதிலளித்தார்.
மிக பிரபலமாகப் பேசப்பட்டது அந்த கேள்விப்பதில்.
அதில்,
பல கேள்விகள் "யோகாசனம் ஆழ்நிலை தியானம்" பற்றி கேட்கப்பட்டன.
ஒரு கேள்வி,
"உடல் வளர்ச்சிக்கு மருந்து மாத்திரை இருப்பது போல், IQ எனும் அறிவு வளர்ச்சிக்கு மருந்து மாத்திரை உள்ளதா.? அதாவது இயல்பாக 40 மார்க் வாங்கும் ஒரு மாணவனை மருந்து மாத்திரை கொடுத்து 90 மார்க் வாங்க வைக்க முடியுமா.?"
என்று வாசகர் ஒருவர் கேட்டார்.
அதற்கு டாக்டர்
"முடியும்.
மருந்து இருக்கிறது. அதுவும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. . . . .
அது தான்
*யோகாசனம்_ஆழ்நிலை_தியானம்"" --என்கிறார்.
///ஆழ்நிலை தியானத்தால் அறிவு வளர்ச்சி பெறுவதை விஞ்ஞானம் நிரூபித்துவிட்டது/// என்றும் சொல்கிறார்.



""மனதை ஒரு நிலைப்படுத்தி, ஒரு முகப்படுத்துவதன் மூலம் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து அறிவுகளையும் நீ பெற்றுவிடுகிறாய்."""
இது மெய்ஞானி விவேகானந்தரின் அருள் மொழி.
இப்போது நன்றாகக் கவனியுங்கள் விஞ்ஞானமும் மெய்ஞானமும்
ஒன்று படுகிறது.

ஆக......
•>விஞ்ஞானியும் டாக்டரும் சொல்லிவிட்டார்கள்.
•>ஆன்மீக ஞானிகளும் சொல்லிவிட்டனர்..
®1) உடல், ஆரோக்கியம் அடைகிறது.
®2) அறிவு IQ வளர்கிறது
®3) நற்குணமும் அறநெறியும் வளர்கிறது ......
யோகாவினால், தியானத்தினால் என்று.

அடுத்து.........
மறைந்த மு.கருணாநிதி அவர்கள் யோகா பயின்ற நிகழ்வைப் பார்ப்போம்

No comments:

Post a Comment

தங்கள் ஆலோசனைகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன